Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெச்சு ஒருடைம் இந்த ஸ்வீட்டை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்...
Sweet Potato Halwa Recipe In Tamil: தற்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீசன் என்பதால், கடைகளில் விலை குறைவில் கிடைக்கும். ஆனால் தற்போது விற்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் இனிப்பாக இருப்பதில்லை. இதனால் நிறைய பேர் அதை வாங்கி சாப்பிட மறுக்கின்றனர்.
ஆனால் இந்த கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே அவ்வப்போது இதை வாங்கி சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய பல முக்கியமான சத்துக்கள் கிடைக்கும். அதுவும் இந்த கிழங்கைக் கொண்டு அல்வா செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* வெல்லம் - 1 சிறிய கப்
* உப்பு - 1 சிட்டிகை
* முந்திரி - சிறிது
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை இட்லி பாத்திரத்தில் வைத்து,
ஆவியில் வேக வைத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு விழுதை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் இனிப்பு சுவைக்கு தேவையான அளவு வெல்லத்தை
எடுத்து, அதில் அதை கரைப்பதற்கு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சிறிது உப்பு சேர்த்து, வெல்ல
நீரை வடிகட்டி சேர்த்து, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை அடுப்பில் வைத்து, உயர் தீயில் வைத்து, நன்கு கிளறி விட
வேண்டும்.
* கலவையானது கெட்டியாகத் தொடங்கியதும், அதில் முந்திரியை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* நன்கு நிறம் மாறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரத் தொடங்கியதும்,
அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கிளறி சுருள கிளறி
இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.



Click it and Unblock the Notifications
