Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
எப்பவும் வெறும் சப்பாத்தியை செய்யாம.. ஒருமுறை இப்படி சப்பாத்தியை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது..
Sweet Potato Chapati Recipe In Tamil: இரவு நேரத்தில் பெரும்பாலானோரின் வீடுகளில் டிபனாக சப்பாத்தி இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? எப்போதும் ஒரே மாதிரி வெறும் சப்பாத்தியை செய்து, அதற்கு சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சப்பாத்தியை சற்று வித்தியாசமாக சுட்டு சாப்பிடுங்கள்.
அதுவும் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தியை செய்யுங்கள். இந்த சப்பாத்திக்கு சைடுடிஷ் எதுவுமே தேவைப்படாது. அந்த அளவில் சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆவியில் வேக வைத்து எடுத்து,
குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு கட்டிகளின்றி
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா
மிளகாய் தூள், எள்ளு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு கோதுமை மாவை சேர்த்து, நீர் சேர்க்காமல் கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பிசைந்த மாவை சிறு சிறு
உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் தேய்த்து
முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக்
கிழங்கு சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications
