Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
ஸ்வீட் கார்ன் குருமா
உங்கள் குழந்தைகளுக்கு ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா? அவர்கள் வரவர சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு பிடித்த ஸ்வீட் கார்ன் கொண்டு குருமா செய்து சப்பாத்தியுடன் கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா? அவர்கள் வரவர சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு பிடித்த ஸ்வீட் கார்ன் கொண்டு குருமா செய்து சப்பாத்தியுடன் கொடுங்கள். இந்த ஸ்வீட் கார்ன் குருமா நிச்சயம் அவர்களுக்கு பிடித்த சுவையில் இருக்கும். இதனால் இதுவரை சரியாக சாப்பிடாத குழந்தைகளும், ஸ்வீட் கார்ன் குருமாவை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ஸ்வீட் கார்ன் குருமா வீட்டில் உள்ளோரும் சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்வீட் கார்ன் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கார்ன் குருமா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 3/4 கப்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கிராம்பு - 1
* பட்டை - 1/4 இன்ச் துண்டு
* ஏலக்காய் - 1
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னைப் போட்டு, போதுமான நீரை ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை ஒரு டீஸ்ஸ்பூன் பாலில் கசகசாவை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய தேங்காயை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தக்காளியை நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த தேங்காய், வதக்கிய தக்காளி, சோம்பு, பாலில் ஊற வைத்த கசகசாவைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்த தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நீர் ஊற்றி, பின் பாலையும் ஊற்றி கிளறி, 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கெட்டியாக இருப்பது போல் இருந்தால், சிறிது நீர் ஊற்றிக் கொண்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வேக வைத்துள்ள ஸ்வீட் கார்னை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஸ்வீட் கார்ன் குருமா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
