Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த 2 பொருள் இருந்தா போதும்.. ஈவ்னிங் மொறுமொறுன்னு போண்டா செஞ்சு சாப்பிடலாம்.. எப்படின்னு பாருங்க..
Sweet Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் பிள்ளைகள் மொறுமொறுவென்று சூடாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகள் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா?
அப்படியானால் வீட்டில் கோதுமை மாவும், வெல்லமும் இருந்தால், சுவையான ஸ்வீட் போண்டாவை செய்து கொடுங்கள். இந்த போண்டா செய்வதற்கு 2 பொருட்கள் இருந்தாலே போதுமானது. இந்த போண்டா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

ஆனால் இந்த போண்டாவிற்கு செய்யும் மாவை மதியமே தயார் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 4 மணிநேரம் மாவை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்தால் தான், போண்டா நன்கு உப்பி வரும்.
உங்களுக்கு ஸ்வீட் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, அதில் 2 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வெதுவெதுப்பா நிலைக்கு வரும் வரை
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
உப்பு, ஏலககாய் தூள், ஆப்ப சோடாவை சேர்த்து கைகளால் கிளறி விட
வேண்டும்.
* பிறகு கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி, மாவுடன் சேத்து
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மாலை போண்டா
சுடுவதாக இருந்தால், மதியமே தயார் செய்து ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் ஓரளவு சூடானதும், தீயைக் குறைத்துவிட்டு,
பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, எண்ணெயில் போட்டு
பொன்னிமாக பொரித்து எடுத்தால், சுவையான ஸ்வீட் போண்டா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications








