Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
சுட்ட கத்திரிக்காய் சட்னி
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் நிறைய உள்ளதா? அந்த கத்திரிக்காயைக் கொண்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் நிறைய உள்ளதா? அந்த கத்திரிக்காயைக் கொண்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியின் சிறப்பு என்னவென்றால், இதை அரைக்க வேண்டிய அவசியமில்லை கையால் பிசைந்தாலே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு சுட்ட கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட கத்திரிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2
* வரமிளகாய் - 4-5
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த கத்திரிக்காயை நெருப்பில் நன்கு சுட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதை குளிர்ந்த நீரில் போட்டு, பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த கத்திரிக்காயை கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வரமிளகாயை நெருப்பில் நன்கு சுட்டு, அதை கையால் உடைத்து, கத்திரிக்காயுடன் சேர்த்து பிசைய வேண்டும்.
* பிறகு புளியை நீரை ஊற வைத்து, கையால் நன்கு பிசைந்து, அதன் சாற்றினை மசித்த கத்திரிக்காயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த கத்திரிக்காயை ஊற்றி சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
