Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..
Suraikai Dosa With Mullangi Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியரா? தினமும் காலையில் தோசையை தான் கேட்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை தோசை சுடுவதாக இருந்தால், சுரைக்காய் தோசையை செய்யுங்கள். இந்த தோசைக்கு முள்ளங்கி சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், பிரமாதமாக இருக்கும். இந்த டிபன் காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் தோசை மற்றும் முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் தோசைக்கு...
* சுரைக்காய் - 1 (தோல் நீக்கி நறுக்கியது)
* அரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* வெந்தயம் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
முள்ளங்கி சட்னிக்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* முள்ளங்கி - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - 2 துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
வறுப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் 3
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசி பருப்பை எடுத்துக் கொண்டு,
அத்துடன் நறுக்கிய சுரைக்காய், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் தோசை
தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முள்ளங்கியை
சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி,
தேங்காய், கறிவேப்பிலை, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, முதலில் அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள முள்ளங்கி கலவையை சேர்த்து, நன்கு
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
முள்ளங்கி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
