Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Sunday Special Honey Garlic Chicken Recipe In Tamil: வார இறுதி வந்தாலே உங்கள் வீட்டில் ஏதாவது புதிதாக ஸ்பெஷலாக செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கன் பிடிக்குமா? இதனால் அடிக்கடி சிக்கன் வாங்குவீர்களா?

அப்படியானால் இந்த வாரம் சிக்கனைக் கொண்டு ரெஸ்டாரண்ட் சுவையில் ஒரு சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். அது தான் ஹனி கார்லிக் சிக்கன். இந்த சிக்கன் ரெசிபியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்து சுவைப்பீர்கள். முக்கியமாக இது புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு ரெசிபி.
உங்களுக்கு இந்த ஹனி கார்லிக் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹனி கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
* முட்டை - 1
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* பூண்டு பவுடர் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 3 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, மிளகுத்
தூள், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பவுடர், சோள மாவு ஆகியவற்றை சேர்த்து
நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், அதில் சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து தேன் ஊற்றி நன்கு கிளறி, வேக வைத்து
எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக எள்ளு விதைகளை தூவி கிளறி இறக்கினால், சுவையான ஹனி
கார்லிக் சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications