Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
சன்டே ஸ்பெஷல்: ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை
Street food Style Chicken Fry Recipe: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் மூன்று வேளையும் அசைவ உணவு தான் சமைத்து சாப்பிடுவீர்களா? அதுவும் இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று செய்துள்ளீர்களா? சற்று வித்தியாசமான ரெசிபியை இன்று ட்ரை செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை செய்யுங்கள். இந்த சிக்கன் ப்ரை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1/2 கப்
* புதினா - 1/2 கப்
* இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 6-8 பல்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு
ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் மிளகாய்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு,
எலுமிச்சை சாறு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு
பிரட்ட வேண்டும்.
* பிறகு அந்த சிக்கனை குறைந்தது 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், அரிசி மாவை சிக்கனுடன் சேர்த்து கிளற
வேண்டும்.
* பின்னர் பிரட்டிய சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு 8-10 நிமிடம்
சிக்கனை வேக வைத்து எடுத்தால், சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன்
ப்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











