Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
சோயா கீமா கோலா உருண்டை
மாலையில் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான ஒரு கோலா உருண்டை செய்து சுவையுங்கள்.
மாலை வேளையில் மழைப் பெய்யும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அதுவும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான ஒரு கோலா உருண்டை செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும்.

இப்போது சோயா கீமா கோலா உருண்டையை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மீல் மேக்கரை வேக வைப்பதற்கு...
* பால் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
மீல் மேக்கருடன் அரைப்பதற்கு...
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கசகசா - 3/4 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
செய்முறை:
* முதலில் பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும்.
* பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும்.
* பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கீமா கோலா உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications





