Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
மொத்தமா மாறிய PhonePe ஆப்.. இனி 2 வகை பேமண்ட் தான்.. ரூ.5000 க்குள், ரூ.5000 க்கு மேல்.. இப்போ என்ன செய்யணும்? | PhonePe Biometric Pay How to Use -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்!
மீல் மேக்கரையும், முட்டையும் வெச்சு ஒருமுறை இப்படி பொடிமாஸ் செய்யுங்க.. சுவை அள்ளும்...
Soya Egg Podimas Recipe In Tamil: மதிய வேளையில் ஒரு சூப்பரான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், முட்டையும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் பொடிமாஸ் செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
இந்த பொடிமாஸ் டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஏனெனில் இதில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. முக்கியமாக இந்த மீல் மேக்கர் முட்டை பொடிமாஸை எந்த வேளையிலும் வெறுமனே கூட சாப்பிடலாம். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் முட்டை பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் முட்டை பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 50 கிராம்
* முட்டை - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான
நீரைப் பிழிந்துவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி
நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து சில
நொடிகள் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நீர் வற்றியதும், முட்டைகளை
உடைத்து ஊற்றி நன்கு கிளறி, மேலே கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூள்
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் முட்டை பொடிமாஸ்
தயார்.
Image Courtesy: Sharmis Passions



Click it and Unblock the Notifications











