Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
சப்பாத்திக்கு மீல் மேக்கரை இந்த ஸ்டைல்-ல சைடு டிஷ்ஷா செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Mealmaker Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? அதுவும் மீல் மேக்கரை அடிக்கடி செய்வீர்களா? அப்படியே செய்தாலும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை மீல் மேக்கரை செய்வதாக இருந்தால், கீழே கொடுத்துள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, அந்த சுவை வித்தியாசமாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் கூடுதலாகவும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு மீல் மேக்கர் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 2 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* வரமிளகாய் - 3
* முந்திரி - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா பொடி
* தண்ணீர் - சிறிது
* கெட்டி தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைப் போட்டு, அதில்
சுடுநீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய், முந்திரி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதோடு மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, சிறிது
நீரை ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கெட்டித் தயிரை நன்கு அடித்து சேர்த்து கிளறி,
எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மீல் மேக்கரை பிழிந்து எடுத்துக் கொண்டு, கொதித்துக்
கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி,
மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல்
மேக்கர் கறி தயார்.



Click it and Unblock the Notifications











