Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Soya Chunks Potato Curry Recipe: மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். இது நிச்சயம் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த மீல் மேக்கர் மசாலா மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (பெரியது, தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மீல் மேக்கர் - 1 கப்
* பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பால் ஊற்றி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











