டேஸ்டியான ஓட்ஸ் டிக்கி- க்ரீன் சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா? ஈஸி ரெசிபி!!

By: Bala karthik
Subscribe to Boldsky

ஓட்ஸை நாம் சமைப்பதற்கு அதிக நேரம் ஒருபோதும் தேவைப்படுவதில்லை. அத்துடன் இதனை தயாரிக்கும் நேரமும் மிக குறைவு தான். இதனை கஞ்சி வடிவத்தில் நாம் சாப்பிட வேண்டியது அவசியமாகும். ஆம், பால் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து அதோடு ஓட்ஸுடன் சர்க்கரையும், உப்பையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். ஆனால், இந்த ரெசிபியானது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நம் மனதில் சலிப்பை உண்டாக்குகிறது.

அதனால், இந்த ஓட்ஸை...ஒரு வித அப்பம், சூப் வகைகள், மில்க்ஷேக் போன்ற விதவிதமான வழிகளில் நாம் சாப்பிட்டு மகிழலாம். இன்று நாம் இந்திய சமையல் பாணியின்படி மேற்கத்திய உணவு பொருள் ஒன்றை தயாரிப்பது எப்படி? என நாம் பார்க்கலாம். ஆம், இன்று நாம் பார்க்க போகும் ஒரு ரெசிபி...ஓட்ஸ் டிக்கி எனப்படும் ஒன்றாகும்.

பன்னீர் மற்றும் நறுக்கிய கேரட்டை கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவில்...அதிகளவில் ஊட்ட சத்துக்களும், சுவையும் நிறைந்திருக்கிறது.

இந்த முறுமுறு ஓட்ஸ் டிக்கியினை சுவைத்து மகிழ, டேஸ்டியான க்ரீன் சட்னியையும் நாம் உடன் சேர்த்துகொள்ளலாம். இவை இரண்டையுமே நாம் செய்வதற்கு அதிக நேரம் ஒன்றும் தேவைப்படுவதில்லை. அத்துடன் தயாரிப்புக்கான காலமும் குறுகியதாகவே அமைகிறது. மேலும், இந்த உணவை நாம் சமைக்க, தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டின் சமையலறையில் இருக்கும்போது ...ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்? செய்ய தொடங்கலாமே.தேவையான பொருட்கள்:

சட்னி செய்ய தேவையானவை:

நறுக்கப்பட்ட புதினா இலைகள் - ½ கப்

நறுக்கப்பட்ட கொத்தமல்லி - ¼ கப்

நறுக்கப்பட்ட வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ் - ½ டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் - 2

உப்பு - சுவைக்கேற்ப

Oats Tikki with Tangy Green Chutney

ஓட்ஸ் டிக்கி செய்ய தேவையானவை:

சமைப்பதற்கு (வேகமாக சமைக்க) உகந்த ஓட்ஸ் - 1 கப்

பன்னீர் - ¼ கப்

நறுக்கிய கேரட் - ¼ கப்

உருளைகிழங்கு - ½ கப் (வேக வைத்தது, மசித்தது)

கொத்துமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

லெமன் ஜூஸ் - 1 டீ ஸ்பூன்

இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 ½ டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா தூள் - ½ டீ ஸ்பூன்

அமுக்கர் தூள் - 1 டீ ஸ்பூன்

பால் - 1 டேபிள் ஸ்பூன்

வேகமாக உருட்டப்பட்ட ஓட்ஸ் (டிக்கிஸை சிறு துண்டுகளாக்க) - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

க்ரீன் சட்னி செய்வது எப்படி?

1. மிக்சர் க்ரைண்டரிலிருந்து சட்னி ஜாடியை (Jar) எடுத்துக் கொள்ளுங்கள். அதில், நம் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் சட்னிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

2. அந்த பொருட்களை எல்லாம் நன்றாக அரைத்து பேஸ்டை போல் ஆக்கி வைத்துகொள்ளுங்கள். அதேபோல், தேவைக்கேற்ப தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்த்து கொள்ளுங்கள்.

3. இப்பொழுது தயாரிக்கப்பட்ட சட்னியை எடுத்து பௌலில் ஊற்றிகொள்ளுங்கள்.

4. அதனை பரிமாரும் வரை பதப்படுத்திகொள்ளுங்கள்.

Oats Tikki with Tangy Green Chutney

ஓட்ஸ் டிக்கி செய்வது எப்படி?

1. ஒரு பெரிய கலப்பதற்கு உகந்த பௌலை எடுத்துகொள்ளுங்கள். அதில் ஓட்ஸை சேர்த்து கொள்ளுங்கள்.

2. அந்த ஓட்ஸில், நறுக்கிய பன்னீரையும், நறுக்கிய கேரட்டையும் சேர்த்துகொள்ள வேண்டும். அவற்றை உங்கள் கைகள் கொண்டு நன்றாக கலந்துகொள்ள வேண்டியது அவசியம்.

3. அந்த கலவையோடு உருளைகிழங்கையும் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

4. அந்த கலவையில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஈரமாக்கிகொள்ள வேண்டும். மீண்டும் நன்றாக அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையும் வரை, கைகளால் பிசைந்துகொள்ள வேண்டும்.

5. இப்பொழுது, உங்களுடைய பிசுபிசுவென இருக்கும் கைகளை கொண்டு, அந்த கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டி பந்துபோல் வைத்துகொள்ள வேண்டும். அதன்பின், அந்த பந்து போன்ற உருண்டையை தட்டி...டிக்கி அல்லது பட்டிஸ் எனப்படும் உணவை போல் வைத்துகொள்ள வேண்டும்.

6. இந்த முறையை கொண்டு மீதமிருக்கும் கலவையையும் தட்டிகொள்ள வேண்டும். இப்பொழுது தட்டை வடிவ டவா (Tawa) ஒன்றை எடுத்துகொண்டு அதில் எண்ணெய்யை ஊற்றிகொள்ளுங்கள்.

Oats Tikki with Tangy Green Chutney

7. அதில் ஒரு டிக்கியை மட்டும் எடுத்து, பாலில் நனைத்து கொள்ளுங்கள்.

8. அந்த டிக்கியை ஓட்ஸைகொண்டு உருட்டி முழுவதுமாக அதனை மூட வேண்டும்.

9. இப்பொழுது ஒவ்வொரு டிக்கியாக எடுத்து டவாவில் போட வேண்டும்.

10. அந்த டிக்கியின் இருப்பக்கங்களை திருப்பி போட்டு வறுக்க வேண்டும்.

11. அந்த டிக்கியின் நிறமானது லேசான தங்க பழுப்பு நிறத்தில் வர, டவாவைவிட்டு எடுக்க வேண்டும்.

12. அந்த சூடான ஓட்ஸ் டிக்கியை, சில்லென இருக்கும் க்ரீன் சட்னியுடன் சேர்த்து பரிமாறி மனம் மகிழலாம்.

English summary

Oats Tikki with Tangy Green Chutney

Oats Tikki with Tangy Green Chutney
Story first published: Wednesday, June 28, 2017, 11:00 [IST]
Subscribe Newsletter