Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
காராமணி சுண்டல்
நவராத்திரிக்கு எப்போதும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சுண்டல் செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக காராமணியைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
சரி, இப்போது காராமணியைக் கொண்டு எப்படி சுண்டல் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
காராமணி - 1/4 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
