Latest Updates
-
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும் -
சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் 8-ம் பார்வை.. 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்... -
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சில்லி சீஸ் டோஸ்ட்
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் - 2 துண்டுகள்
சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தின் மேல் அந்த கலவையை பரப்பி, மீண்டும் தோசைக்கல்லில் வைத்து சீஸ் உருகும் வரை வேக விடவும்.
இப்போது சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி!!!
Image Couretsy: sharmispassions



Click it and Unblock the Notifications
