Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
ப்ராக்கோலி கபாப்
மாலையில் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான ஓர் ரெசிபியைக் கொண்டு போக்க நினைத்தால், மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளான ப்ராக்கோலியைக் கொண்டு கபாப் செய்து கொடுக்கலாம். மேலும் இது மிகவும் அற்புதமான மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியான ஓர் ஸ்நாக்ஸ்.
இங்கு அந்த ப்ராக்கோலி கபாப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 3 கப்
சீஸ் - 1 கப் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
முட்டை - 2
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் அதில் ப்ராக்கோலியை சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து, பின் நீரை வடிகட்டி ப்ராக்கோலியைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் ப்ராக்கோலியைப் போட்டு, அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, சீஸ், மிளகுத் தூள், பிரட் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஓரளவு தட்டையாக தட்டிப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்படி அனைத்தையும் பொரித்து எடுத்தால், ப்ராக்கோலி கபாப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
