Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
பீர்க்கங்காய் பஜ்ஜி
காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, காய்கறிகளை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது. அதிலும் குழந்தைகள் பீர்க்கங்காய் சாப்பிடவே மாட்டார்கள். எனவே அந்த பீர்க்கங்காயை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
அதுவும் மாலை வேளையில் டீ/காபி குடிக்க கொடுக்கும் வேளையில் செய்து கொடுத்தால், அவர்களின் பசி நீங்கும். சரி, இப்போது அந்த பீர்க்கங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு/சோள மாவு - 1/2 கப்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, பின் அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு/சோள மாவு, சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி!!!
Image Courtesy: sudhastrials



Click it and Unblock the Notifications
