For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காய ரிங்ஸ்

By Maha
|

மாலை வேளையில் வித்தியாசமான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் வெங்காயத்தைக் கொண்டு ஈஸியாக வெங்காய ரிங்ஸ் செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்ய 10 நிமிடம் போதும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

சரி, இப்போது அந்த மொறுமொறுப்பான வெங்காய ரிங்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Crispy Onion Rings

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
மைதா - 1/2 கப்
சோள மாவு - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பிரட் தூள் - தேவையான அளவு
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை பட்டையான வளையங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு வெங்காய வளையத்தை, கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பிரட் தூளில் கோட்டிங் கொடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து வெங்காய வளையத்தையும் மாவு மற்றும் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து, அவற்றின் மேலே சாட் மசாலாவை தூவி பரிமாறினால், வெங்காய ரிங்ஸ் ரெடி!!!

Story first published: Wednesday, March 19, 2014, 17:24 [IST]
Desktop Bottom Promotion