Latest Updates
-
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!
தேங்காய் பால் சூப்
மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.
இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
சோள மாவு - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
பசும்பால்/சாதாரண பால் - 1 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (தோல் நீக்கி துருவியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1/2
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பால், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், தேங்காய் பால் மற்றும் சோள மாவு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதித்ததும், அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் ரெடி!!! இதனை பரிமாறும் போது, இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications
