Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
முட்டைக்கோஸ் மிளகு சூப்
உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். இத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான முட்டைக்கோஸ் மிளகு சூப்பை தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
சரி, இப்போது அந்த முட்டைக்கோஸ் மிளகு சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோள மாவு - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் காய்கறிகளை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் சோள மாவை கட்டி சேராதவாறு தூவி நன்கு கிளறி, கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் மிளகு சூப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
