Latest Updates
-
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சுரைக்காய் பருப்பு குழம்பு
மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் கொண்டு பருப்பு குழம்பு செய்தால், அற்புதமாக இருக்கும்.
சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த காய்கறியை வெயில் கொளுத்தும் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவும் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் கொண்டு பருப்பு குழம்பு செய்தால், அற்புதமாக இருக்கும். உங்களுக்கு சுரைக்காயைக் கொண்டு எப்படி பருப்பு குழம்பு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே சுரைக்காய் பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1/2 (நறுக்கியது)
* பாசிப் பருப்பு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் அல்லது தேவையான நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
* பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











