Just In
- 38 min ago
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 4 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 7 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும் சுரைக்காய் குருமா!
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு அட்டகாசமான ருசியில் குருமா செய்யுங்கள். இந்த சுரைக்காய் குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும்.
வாரம் ஒருமுறை சுரைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்மின் சி, ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. எனவே இது உடலினுள் பல மாயங்களை உண்டாக்குகிறது. சுரைக்காயின் சில நன்மைகளாவன: இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இதயத்திற்கு நல்லது, எடை இழப்பிற்கு உதவுகிறது, தூக்க பிரச்சனையை சரிசெய்கிறது, செரிமானத்திற்கு நல்லது.
உங்களுக்கு சுரைக்காய் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 250 கிராம்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சுரைக்காயை கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின்பு வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி 7-10 நிமிடம் சுரைக்காய் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* சுரைக்காய் வெந்து கொண்டும் அதே சமயத்தில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அரைக்கும் போது, 4-5 முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* சுரைக்காய் வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சுரைக்காய் குருமா தயார்.
Image Courtesy: chitrasfoodbook