Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Curry leaves Coconut Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைதான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையை தேங்காயுடன் சேர்த்து சூப்பரான சட்னி செய்யுங்கள்.

அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்ற தேங்காய் சட்னி செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் சட்னியை செய்யுங்கள். இப்படி கறிவேப்பிலை சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி சமையலே தெரியாதவர்கள் கூட செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் இதில் கறிவேப்பிலை அதிகம் சேர்க்கப்படுவதால் இந்த சட்னி சரும ஆரோக்கியத்திற்கும், கூந்தல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.
உங்களுக்கு ஆரோக்கியமான கறிவேப்பிலை தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 3 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- ½ கப் கறிவேப்பிலை
- 1 கப் துருவிய தேங்காய்
- சிறு நெல்லிக்காய் அளவு புளி
- 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- தேவையான அளவு உப்பு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன்
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, 2 பல் பூண்டு, 1 அங்குல இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.
- பூண்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் ½ கப் கறிவேப்பிலையைச் சேர்த்து, தொடர்ந்து வறுக்கவும்.
- கறிவேப்பிலை நன்கு மொறுமொறுப்பாக மாறும் வரை வறுக்கவும்.
- இதை முழுமையாக ஆறவைத்து, அந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் துருவிய ஒரு கப் தேங்காயைச் சேர்க்கவும்.
- அதனுடன், சிறிதளவு புளி, 2 ஸ்பூன் வேர்க்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- ½ கப் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான கறிவேப்பிலை தேங்காய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications