Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
எப்பவும் இட்லி, தோசை செய்யாம.. 1 கப் கோதுமை மாவும், 2 முட்டையும் இருந்தா.. காலையில இந்த டிபனை செஞ்சு கொடுங்க..
Egg Paratha Recipe In Tamil: காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோரும் வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் வீட்டில் கோதுமை மாவும், முட்டையும் இருந்தால், அவற்றைக் கொண்டு முட்டை பராத்தாவை செய்து கொடுங்கள்.
இந்த முட்டை பராத்தா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை பராத்தாவை எப்படி செய்வதெனறு தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்டப்பிற்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் உப்பு
சேர்த்து கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் எண்ணெய் ஊற்றி ஒருமுறை நன்கு பிசைந்து, சிறிது நேரம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள்
தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா, சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பங்கை
எடுத்து உருட்டி, நன்கு மெல்லிய சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்த
சப்பாத்தியைப் போட்டு, அதன் நடுவே முட்டை கலவையை வைத்து, லேசாக பரப்பி
விட வேண்டும்.
* பின் நான்கு பக்கங்களையும் மடித்துவிட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும்,
பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று மற்றொரு
சப்பாத்தியையும் செய்தால், சுவையான முட்டை பராத்தா தயார்.
Image Courtesy: Sujis Recipes



Click it and Unblock the Notifications





