Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் செம்பருத்தி பூ சட்னி ரெசிபி... வீட்டிலேயே செஞ்சு எல்லாரையும் அசத்துங்க!
செம்பருத்தி பூவும் இலையும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இது கொழுப்பின் அளவை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதோடு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. முடி உதிர்வைக் குறைப்பது, முடியின் வளர்ச்சியை தூண்டுவதோடு, உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் பண்புகளையும் கொண்டிருக்கிறது.
செம்பருத்தி பூவை பெரும்பாலும் தலைமுடியின் பராமரிப்பிற்கு பயன்படுத்துவோம். சிலர் அதில் டீ தயாரித்து குடிப்பார்கள். சிலருக்கு வெறுமனே செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட பிடிக்கும். சிலர் தோசையில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் நாம் இங்கு செம்பருத்தி பூக்களை வைத்து தோசைக்கு சைடு டிஷ்ஷான சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூ - 15-20
- தேங்காய் - ½ மூடி
- எலுமிச்சை பழம் - ½ மூடி
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 5
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் - சிறிதளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- செம்பருத்தி பூவின் அடிப்பகுதியில் இருக்கும் காம்பை நீக்கி
இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.
- பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெதுவெதுப்பாக சூடு செய்வும்.
- பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து
செம்பருத்தி இதழ்களை நன்றாக கழுவவும்.
- இது பூவில் இருக்கும் சிறு பூச்சிகள் அல்லது எறும்புகளை
நீக்கும்.
- மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரால் அலசவும்.
- பின் செம்பருத்தி இதழ்களை தண்ணீர் இல்லாமல் உலர வைக்கவும்.
- பூண்டின் தோலை நீக்கி வைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைக்கவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி
வைக்கவும்.
- இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த செம்பருத்தி பூ
இதழ்கள், பூண்டு, இஞ்சி, மற்றும் காம்பு நீக்கிய வரமிளகாயை
சேர்க்கவும்.
- பின் அதனுடன் கருவேப்பிலை, துருவிய தேங்காய், மற்றும் எலுமிச்சை
சாறு சேர்க்கவும்.
- கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து
கொள்ளவும்.
- இப்போது வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் பச்சை கருவேப்பிலை சேர்க்கவும்.
- அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்டினி உடன் சேர்த்தால் சுவையான
செம்பருத்தி பூ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
