Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமா- எப்படி ஈஸியா செய்றது-ன்னு பாருங்க...
Saravana Bhavan Vellai Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், ஹோட்டல்களில் கொடுப்பதும் போன்ற சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 12 பல்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* மராட்டி மொட்டு - 2
* கிராம்பு - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் - சிறிது (நறுக்கியது)
* பட்டாணி - 1/4 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரி, கசகசா சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, லேசாக வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, மராட்டி மொட்டு, கிராம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காலிஃப்ளவர், பட்டாணி, கேரட், பீன்ஸ்,
உருளைக்கிழங்கு சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, பச்சை
மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி
வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* காய்கறிகளானது நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவானது நன்கு கொதித்து, சற்று கெட்டியாகத் தொடங்கியதும்,
கறிவேப்பிலை, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சரவணபவன்
வெள்ளை குருமா தயார்.



Click it and Unblock the Notifications