Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
சரவணபவன் வெஜிடபிள் குருமா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...!
Saravana Bhavan Vegetable Kurma Recipe in Tamil: வீட்டில் என்னதான் விதவிதமாக சமையல் செய்து சாப்பிட்டாலும் கடைகளில் சாப்பிடும் உணவுதான் நம் நாக்குக்கு சுவையாக தெரியும். சிலருக்கு அவற்றை வீட்டில் முயற்சி செய்து பார்க்கும் ஆர்வமும் இருக்கும். ஆனால் அதன் சுவை சரியாக வருவதில்லை என்கிற வருத்தமும் இருக்கும்.
அந்த வரிசையில் இருக்கும் ஒரு அருமையான சைவ உணவுதான் சரவணபவன் வெஜிடபிள் குருமா. இந்த சூப்பரான சரவணபவன் வெஜிடபிள் குருமாவை எப்படி வீட்டில் அதே சுவையில் செய்வது என்று உந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பச்சை பட்டாணி - 1 கப்
- சௌசௌ - 1
- கேரட் - 2
- பீன்ஸ் - 10
- உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
- தேங்காய் - ½ மூடி
- முந்திரி - 6
- கசகசா - 1 டீ ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 2 (சிறியது)
- தக்காளி - 3 (சிறியது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - 1 டீ ஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- புளிப்பில்லாத தயிர் - ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- பால் - ½ கப்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
- பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.
- சௌசௌ, கேரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- அதனுடன் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்.
- விசில் தானாக அடங்கும் வரை காத்திருக்கவும்.
- வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் கசகசா, முந்திரி பருப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- வேக வைத்த காய்கறிகளை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு விடவும்.
- தயிரை நன்றாக அடித்து சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான சரவண பவன் வெஜ் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications











