Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும்
Saravana Bhavan Pachai Payaru Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? இதற்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமவைதான் செய்வீர்களா? புதுசா ஏதாவது வெரைட்டியான சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? பன்னீர், சுண்டல், மஷ்ரூம் போன்ற வழக்கமான சைடிஷா இல்லாமல் பச்சை பயிறை வைச்சு சரவணபவன் ஸ்டைலில் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சைடிஷை முயற்சி செய்யுங்க.

இந்த சரவணபவன் ஸ்டைல் பச்சை பயறு குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி சாதம், புலாவ் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த குருமா செய்வதற்கு எளிதாக இருப்பதோடு சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு வழக்கமான குருமா சாப்பிட்டு போரடித்திருந்தால் இந்த குருமாவை முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு சரவண பவன் ஸ்டைல் பச்சை பயறு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவண பவன் ஸ்டைல் பச்சை பயறு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறை ஊற வைக்க:
- 1/2 கப் பச்சை பயிறு
- 2 கப் தண்ணீர்
அரைக்க:
- 1/4 கப் தேங்காய்
- 3 பல் பூண்டு
- 4 முந்திரி பருப்பு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கசகசா
- 1 டேபிள் ஸ்பூன் தயிர்
- தேவையான அளவு தண்ணீர்
- 5 சின்ன வெங்காயம்
- 1 ஏலக்காய்
- 1 அன்னாசிப்பூ
- சிறிதளவு கல்பாசி
- 1 கிராம்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 தக்காளி
- 3/4 கப் வெங்காயம்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1/2 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் பச்சை பயிறை 3 நிமிடங்கள் வறுக்கவும். இதை ஒரு தட்டுக்கு மாற்றவும்.
- வறுத்த பருப்பை சூடான நீரில் சில மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் அரைக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து இறுதியாக சிறிதளவு நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தேவையான உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கூழ் பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் ஊற வைத்த பச்சை பயிறை இதில் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
- அதன்பின் அரைத்த கலவையைச் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைத்து, பின்னர் அடுப்பை 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
- பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் குக்கரை திறந்து தண்ணீர் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்தால் சுவையான சரவணபவன் ஸ்டைல் பச்சை பயறு குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
