Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
சுவையான... சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை வறுவல் செய்து சுவைக்கலாம்.
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை வறுவல் செய்து சுவைக்கலாம். உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை உரித்துவிட்டு, வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு கடாய்/பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
* பிறகு, வெட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகாய் தூற் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு கிளறி விட வேண்டும்.
* கிழங்கு கடாயில் ஒட்டுவது போன்று இருந்தால், சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குலைந்துவிடும் வகையில் கிளறி விடாதீர்கள். கிழங்கு ஓரளவு நன்கு வதங்கிய பின், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் தயார்.
குறிப்பு:
* இந்த வறுவல் செய்வதற்கு நான்ஸ்டிக் பயன்படுத்தினால், பாத்திரத்தில் அதிகம் ஒட்டுவதும் குறையும் மற்றும் எண்ணெயும் அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை.
* இஞ்சி மற்றும் பூண்டு வாய்வுத் தொல்லை பிரச்சனையைத் தடுக்க உதவும்.
* வேண்டுமானால், தாளிக்கும் போது சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் சாம்பார் பொடிக்கு பதிலாக கரங்ம மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
* கிழங்கு இனிப்பு என்பதால், மிளகாய் தூளை உங்களுக்குத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications