Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அடுத்தமுறை தோசையை இப்படி சுட்டு கொடுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க..
Rottukadai Poondu Kara Dosa Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? எப்போதும் வெறும் தோசையை சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு நாள் தோசையை வெறுத்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது ஸ்பெஷல் தோசையை செய்து கொடுங்கள்.
அதுவும் இன்று ரோட்டுக்கடை பூண்டு கார தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை அரைத்து, தோசையின் மேல் தடவ வேண்டும். அத்துடன் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 8
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசைக்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயையும், புளியையும் சுடுநீரில் 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசையை
சுட்டு, அதன் மேல் சிறிது நெய்யை தடவி, பின் அரைத்து வைத்துள்ள
சட்னியை தோசையின் மேல் சிறிது வைத்து தடவி விட்டு, தோசை சற்று
பொன்னிறமானதும், தோசையை மடித்து பரிமாறினால், சுவையான ரோட்டுக்கடை
பூண்டு கார தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications