Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
Peerkangai Thakkali Kadayal Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை அதிகம் சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை காய்கறி சாப்பிட வைக்க வேண்டுமா? அதுவும் பீர்க்கங்காய் என்றால் தொடக்கூடமாட்டார்களா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயுடன் தக்காளி சேர்த்து கடைந்து சட்னி செய்து கொடுங்கள். இந்த பீர்க்கங்காய் தக்காளி சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பீர்க்கங்காய் தக்காளி கடையல் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 7-8
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 20
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* தக்காளி - 5 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பீர்க்கங்காய் - 1/2 கிலோ
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பிறகு பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை
சேர்த்து, அத்துடன் சிறிய துண்டு புளியையும் சேர்த்து நன்கு 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி
மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
பின் அதில் சாம்பார் தூள் சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி, மூடி
வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் 1 கைப்பிடி கொத்தமல்லியைத் தூவி
கிளறி, 2 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* இறுதியாக மத்து கொண்டு நன்கு கடைந்துவிட்டால், சுவையான
பீர்க்கங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications