Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க...
Riceflour Nuggets Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அரிசி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த அரிசி மாவைக் கொண்டு கடைகளில் விற்கப்படும் நக்கட்ஸ் போன்று செய்து கொடுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு நன்கு மொறுமொறுவென்று இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு அரிசி மாவு நக்கட்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு நக்கட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பிரட் தூள் அல்லது ரவை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பெருங்காயத் தூள்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மிகவும் இறுக்கமாக
பிசையாமல், சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உருளை வடிவில்
உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சோள மாவை எடுத்து, நீரை சேர்த்து ஓரளவு நீர் போன்று
கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் உருட்டி வைத்துள்ள ஒவ்வொன்றையும் எடுத்து, சோள மாவில்
பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டி வைத்ததை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி மாவு நக்கட்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications








