ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்... இத ஒருவாட்டி வீட்டுல செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Restaurant Style Dragon Chicken Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து தர நினைக்கிறீர்களா? அதுவும் சிக்கன் கொண்டு புதுமையான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கனை செய்து கொடுங்கள். இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Restaurant Style Dragon Chicken How To Make a Dragon Chicken

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* எலும்பில்லாத சிக்கன் - 400 கிராம்
* முட்டை வெள்ளைக்கரு - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

ப்ரை செய்வதற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 20
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி கார்லிக் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயத் தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோள மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே எண்ணெயில் சிக்கனை சேர்த்து முன்னும், பின்னும் தலா ஒரு நிமிடம் என 2 நிமிடம் வேக வைத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சில்லி கார்லிக் பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் ப்ரை செய்த சிக்கன் துண்டுகள், முந்திரி மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து நன்கு 2 நிமிடம் உயர் தீயில் வைத்து கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, February 8, 2026, 16:51 [IST]
Desktop Bottom Promotion