Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல பிள்ளைகளுக்கு இப்படி செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Rava Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுத்து ஆற்ற வேண்டுமா? உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு என்றால் ரொம்ப பிடிக்குமா? பொதுவாக அரிசி மாவை கொண்டு தான் புட்டு செய்வோம். ஆனால் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டும் பஞ்சு போன்று மென்மையாக புட்டு செய்யலாம் என்பது தெரியுமா?
இந்த புட்டு மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருவேளை உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு பிடிக்காதென்றால், இந்த புட்டை செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த புட்டு ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு ரவா புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த ரவை - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து
கைகளால் பிரட்டி, கட்டிகளின்றி பிசைந்து விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு இட்லி தட்டில் ஒரு வாழை இலையை வைத்து, அதன் மேல் இந்த
புட்டு மாவை போட்டு, இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி, அடுப்பில்
வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி மூடியை திறந்து, அந்த
புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, புட்டுடன்
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறினால்,
சுவையான ரவா புட்டு தயார்.



Click it and Unblock the Notifications











