Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட்டா சூப்பரா இருக்கும்...
Rava Appam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை போக்கும் வகையிலும், ஆரோக்கியமாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொள்ள நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸை மாலை வேளையில் செய்யுங்கள். அது தான் ரவா பணியாரம் அல்லது ரவா அப்பம். இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு ரவா அப்பம் அல்லது ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ரவை - 1 கப்
* ஏலக்காய் - 3
* கோதுமை மாவு - 1/2 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை எடுத்து, அத்துடன்
1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க
வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி நன்கு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ரவையை எடுத்து, அத்துடன் 3 ஏலக்காய்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவையை எடுத்து, அத்துடன் 1/2 கப்
கோதுமை மாவை சேர்த்து, அத்துடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, வெல்ல
நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறி,
மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவி வைத்துள்ள
தேங்காய் மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து, பணியார மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் நெய் அல்லது நல்லெண்ணெயை கொஞ்சமாக ஊற்ற வேண்டும். பின்
அதில் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முன்னும்
பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
ரவா பணியாரம் அல்லது ரவா அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications