ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Rava Kuzhi Paniyaram With Thengai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு எதுவும் இல்லையா? வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த வெள்ளை ரவையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பணியாரம் செய்யுங்கள். இந்த ரவா குழிப்பணியாரம் நன்கு மொறுமொறுவென்று ருசியாக இருக்கும். அதுவும் இந்த சட்னிக்கு தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த பணியாரத்தை ஒருமுறை செய்தால், பின் வாரம் ஒருமுறை இதை செய்வீர்கள்.

Rava Kuzhi Paniyaram With Thengai Chutney How To Make This Delicious Breakfast

உங்களுக்கு இந்த ரவா குழிப்பணியாரம் மற்றும் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா குழிப்பணியாரம் மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ரவா குழி பணியாரத்துக்கு...

* ரவா - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* லேசாக புளித்த தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்

பணியாரம் தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

பிற பொருட்கள்...

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/4 கப்

சட்னி வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, உப்பு, லேசாக புளித்த தயிர் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து மூடி வைத்து, தனியாக 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் சட்னி வதக்குவதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, துருவிய தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொண்டால், தேங்காய் சட்னி தயார்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள ரவையுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள பணியார மாவை குழிகளில் ஊற்றி, குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிறிது நேரம் கழித்து பணியாரத்தை திருப்பி போட்டு, பொன்னிறமாகும் வரை நன்கு பிரட்டி விட்டு வேக வைத்து எடுத்தால், ரவா குழிப்பணியாரம்
தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 8, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion