Latest Updates
-
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம்
1 கப் ரவா இருந்தா இந்த மாதிரி டிபன் செய்யுங்க... டேஸ்ட் பிரியாணிய விட சூப்பரா இருக்கும்...!
Rava Kichadi Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். ஒரு மாறுதலுக்கு ஏதாவது செய்யலாம் என்றால் உப்புமாதான் எளிய வழி. ஆனால் உப்புமா என்றாலே பயப்படுபவர்கள்தான் அதிகம். ரவாவை வைத்து உப்புமா செய்வது என்றால் பொதுவாக மக்கள் விரும்புவதில்லை என்பது உண்மைதான்.
அதுவே ரவாவை கொஞ்சம் வித்தியாசமாக மற்றும் சுவையாக செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ரவாவை எப்படி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்தால் அதற்கு இந்த ரவா கிச்சடிதான் எளிதான மற்றும் சுவையான வழியாகும். இஞ்சி, பூண்டு, கிராம்பு, முந்திரி போன்றவை சேர்ப்பதால் இந்த கிச்சடி பிரியாணி சுவையில் இருக்கும். இந்த பதிவில் ரவாவை வைத்து எப்படி சூப்பரான கிச்சடி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
-1 கப் ரவை
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 3 பீன்ஸ்
- 1 கேரட்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1/2 துண்டு இஞ்சி
- 4 பூண்டு பல்
- 4 பச்சை மிளகாய்
- 2 பட்டை துண்டு
- 10 முந்திரி
- 1 பிரியாணி இலை
- 1 ஸ்பூன் சோம்பு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் ஒரு கப் ரவையை போட்டு வறுத்து அடுப்பிலிருந்து இறக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
- பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை, பட்டை, சோம்பு மற்றும் முந்திரியை போட்டு வறுக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள நறுக்கிய தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை இதனுடன் சேர்த்து சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுத்து அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
- காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் மேலும் இரண்டரை கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பின் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- தண்ணீர் நன்றாக வற்றியதும் அதில் ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து ஒரு நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ரவா கிச்சடிக்கு தேங்காய் சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
