Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Rava Bun Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? மேலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் ரவை இருந்தால், அந்த ரவையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரவா பன் தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு தக்காளி சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் காம்போ செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த டிபன் காம்போவை செய்தால், பின் வாரந்தோறும் இந்த டிபனை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பன் தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரவா பன் தோசை மாவிற்கு..
* ரவை - 1 கப்
* உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 3
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 3 பல்
* பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு பன் தோசைக்கான மாவை தயார் செய்ய, மிக்சர் ஜாரில் ரவையை
எடுத்துக் கொண்டு, அத்துடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து முதலில்
அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி, மூடி வைத்து
2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதை திருப்பிப் போட்டு நன்கு
பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா பன் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications
