1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட்டா சூப்பரா இருக்கும்...

Posted By:

Rava Appam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை போக்கும் வகையிலும், ஆரோக்கியமாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொள்ள நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸை மாலை வேளையில் செய்யுங்கள். அது தான் ரவா பணியாரம் அல்லது ரவா அப்பம். இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா அப்பம் அல்லது ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Rava Appam How To Make a Rava Appam Recipe

தேவையான பொருட்கள்:

* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ரவை - 1 கப்
* ஏலக்காய் - 3
* கோதுமை மாவு - 1/2 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய்/நெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை எடுத்து, அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ரவையை எடுத்து, அத்துடன் 3 ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவையை எடுத்து, அத்துடன் 1/2 கப் கோதுமை மாவை சேர்த்து, அத்துடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, வெல்ல நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து, பணியார மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் நெய் அல்லது நல்லெண்ணெயை கொஞ்சமாக ஊற்ற வேண்டும். பின் அதில் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் அல்லது ரவா அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 3, 2024, 17:27 [IST]
Desktop Bottom Promotion