ரம்ஜான் நோன்பு கஞ்சி: குக்கரில் 2 விசில்-ல சூப்பரா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...

Posted By:

Ramzan Nombu Kanji Recipe In Tamil: ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கொடுக்கப்படும். இந்த நோன்பு கஞ்சி மிகவும் பிரமாதமாக இருக்கும். இதை உங்கள் வீட்டிலேயே செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில பொருட்களைக் கொண்டே குக்கரில் ஈஸியாக செய்துவிடலாம்.

இந்த கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு உங்கள் பிள்ளைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் நோன்பு கஞ்சி செய்தால், அது அசைவ சுவையில் சூப்பராக இருக்கும்.

Ramzan Nombu Kanji How To Make Veg Nombu Kanji

உங்களுக்கு நோன்பு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நோன்பு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி/சீரக சம்பா அரிசி - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன் (1 மணிநேரம் ஊற வைத்தது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/4
* சீரகம் - 1/4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முழு பூண்டு - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 2 கைப்பிடி

செய்முறை:

* முதலில் பச்சரிசி அல்லது சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெந்தயத்தை நீரில் 2 முறை கழுவி, சிறிது நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பூண்டு பற்கள் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள வெந்தயத்தை நீரை வடிகட்டி விட்டு சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஊற வைத்த அரிசி பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 5 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் கஞ்சி பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, துருவிய தேங்காயை கைகளால் நன்கு நசுக்கி சேர்த்து கிளறி, கொதி வர ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான நோன்பு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 27, 2026, 20:00 [IST]
Desktop Bottom Promotion