Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
வெறும் 3 பொருளை வெச்சு.. இந்த உருண்டைய செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. கால்சியம் குறைபாடே வராது..
Ragi Urundai Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிக்கடி சத்தான உணவுகளை செய்து கொடுப்பீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் கால்சியம் அதிகம் நிறைந்த பாலை குடிக்கவே மாட்டார்களா? இதனாலேயே அவர்களின் உடலில் கால்சியம் குறைவாக உள்ளதா?
அப்படியானால் அவர்களுக்கு கால்சியம் போதுமான அளவில் கிடைக்க ராகியை அவர்களின் உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் ராகியை கஞ்சியாகவோ, புட்டு போன்றோ செய்து கொடுத்தால் சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்களுக்கு அந்த ராகியை கொண்டு ஒரு இனிப்பு உருண்டையை செய்து கொடுங்கள். இப்படி செய்யும் உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டாலே, கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உங்களுக்கு ராகி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ராகி மாவு - 1 கப்
* பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
* ஏலக்காய் - 1
* நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
* முந்திரி - தேவையான அளவு (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, ராகி
மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு நிறம் மாறும் வரை
வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து, நன்கு
வறுத்து இறக்கி, குளிர வைத்து, அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த ராகி மாவை சேர்த்து, அத்துடன் 1
ஏலக்காயை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து, அத்துடன்
நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தட்டில் அரைத்ததை போட்டு, அத்துடன் நறுக்கிய முந்திரியை
சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உருண்டைகளாக உருட்டினால்,
சுவையான ராகி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications









