Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
1 கப் ராகி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. சத்தானதும் கூட..
Ragi Sweet Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் சற்று இனிப்பாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக, ஆவியில் வேக வைத்த ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்தால், அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் அல்லவா?
அதுவும் உங்கள் வீட்டில் 1 கப் ராகி மாவு இருந்தால், மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் இனிப்பான கொழுக்கட்டையை செய்து கொடுக்கலாம். இந்த ராகி கொழுக்கட்டை மிகச்சிறந்த ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக ஒருமுறை இதை செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ராகி ஸ்வீட் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ஸ்வீட் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 கப் (துருவியது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* வெல்லம்/நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்த ராகி மாவு - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முந்திரியை சேர்த்து சிறிது
நேரம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, 1 சிட்டிகை உப்பு மற்றும்
1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வறுத்த ராகி மாவை சேர்த்து கட்டிகளின்றி நன்கு நுர்
வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* நீர் வற்றி மாவு நன்கு சுருண்டு வரத் தொடங்கினால், அடுப்பை
அணைத்துவிட்டு, அந்த மாவை குளிர வைக்க வேண்டும்.
* மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையில் எண்ணெய் தடவி,
சிறிது மாவை எடுத்து உருட்டி, நீளவாக்கில் கொழுக்கட்டை போன்று
பிடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் அந்த இட்லி தட்டை வைத்து, 10 நிமிடம்
வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி ஸ்வீட் கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications









