Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Ragi Suraikkai Dosa With Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டென்று ஒரு வித்தியாசமான சுவையுடைய, அதே சமயம் சத்தான காலை டிபனை செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் ராகி மாவும், சுரைக்காயும் உள்ளதா?

அப்படியானால் அவற்றைக் கொண்டு ராகி சுரைக்காய் தோசையையும், அதற்கு சைடு டிஷ்ஷாக வெங்காய சட்னியையும் செய்யுங்கள். இந்த காம்போ அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த ராகி சுரைக்காய் தோசை மற்றும் வெங்காய சட்னி ரெசிபி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி சுரைக்காய் தோசை மற்றும் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1/4 இன்ச்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 ஸ்பூன்
* பூண்டு - 1 பல்
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
ராகி தோசைக்கு...
* சுரைக்காய் - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* ராகி மாவு - 1 டம்ளர்
* இட்லி மாவு - 1 கரண்டி
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி,
வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை, வேர்க்கடலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, புளி, கொத்தமல்லியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சீரகத்தை சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* பின்னர் சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சட்னி
தயார்.
* அடுத்து, சுரைக்காயை எடுத்து தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி 1
கப் சுரைக்காயை கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சுரைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1 டம்ளர் ராகி மாவை எடுத்து, அத்துடன் இட்லி மாவை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக சுட்டு எடுத்தால், சுவையான ராகி சுரைக்காய்
தோசை தயார்.



Click it and Unblock the Notifications
