1 கப் ராகி மாவும், 1 கப் இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. செமயா இருக்கும்..

Posted By:

Ragi Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸை செய்து கொடுக்காமல், சற்று வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் ராகி மாவும், இட்லி மாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு போண்டா செய்து கொடுங்கள். இந்த ராகி போண்டா சுவையாக இருப்பது மட்டுமின்றி, சற்று சத்தானதும் கூட. மேலும் இந்த ராகி போண்டா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Ragi Bonda How To Make a Crispy And Tasty Ragi Bonda Recipe

உங்களுக்கு ராகி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 1 கப்
* இட்லி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் இட்லி மாவை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் போண்டா மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 9, 2025, 19:15 [IST]
Desktop Bottom Promotion