Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
சப்பாத்திக்கு இந்த பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Punjabi Style Lady Finger Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? சப்பாத்தி செய்வது வேண்டுமென்றால் எளிதாக இருக்கலாம் ஆனால் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கடினமான காரியமாகும்? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் யாரும் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்களா?
பொதுவாக வெண்டைக்காயை குழம்பு அல்லது பொரியல் செய்துதான் கொடுப்பீர்களா? ஆம் எனில், வெண்டைக்காயை வைத்து இந்த மாதிரி பஞ்சாப் ஸ்டைல் சப்ஜி செய்து கொடுங்கள். இந்த பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ஒருமுறை இப்படி வெண்டைக்காய் மசாலா செய்தால், வெண்டைக்காயை சாப்பிடாதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசாலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வெண்டைக்காய் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- பச்சை மிளகாய் - 1
- புளிக்காத தயிர் - 1/4 கப்
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- தனியா தூள் - 1½ டீஸ்பூன்
- சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
- கறி மசாலா தூள் - ½ டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
- முதலில் வெண்டைக்காயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை கருகாமல் தனியாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத் தூள் மற்றும் கறி மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் வறுத்த வெண்டைக்காயை இப்போது மசாலா கலவையில் சேர்த்து மெதுவாக கிளறவும்.
- வெண்டைக்காய் முக்கால்வாசி வெந்ததும் கால் கப் புளிக்காத தயிர் சேர்க்கவும்.
- பின்னர் 3-4 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் சமைக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் சப்ஜி ரெடி.
- இது சப்பாத்தி, ரொட்டி மற்றும் நான் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
