1 கைப்பிடி புதினாவும், 1 கப் கோதுமை மாவும் வெச்சு.. ஒருடைம் இப்படி தோசை சுடுங்க.. மொறுமொறுன்னு செமயா இருக்கும்

Posted By:

Mint Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை சுடுவீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காலையில் தோசை சுட மாவு இல்லையா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் புதினாவும், கோதுமை மாவும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுடுங்கள்.

இந்த புதினா தோசை ரவா தோசை போன்றே நன்கு மொறுமொறுவென்று அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த புதினா தோசையை ஒருமுறை வீட்டில் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த புதினா தோசைக்கு தேங்காய் சட்னி பக்காவான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

Pudina Dosa How To Make a Mint Dosa Recipe

உங்களுக்கு புதினா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1 கப்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள புதினா கலவையை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சில்லி ப்ளேக்ஸை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து, அப்படியே மடித்து எடுத்தால், சுவையான புதினா தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 30, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion