Latest Updates
-
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!
ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Potato White Kurma Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் பூரி செய்ய போகிறீர்களா? பெரும்பாலும் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா அல்லது உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்வீர்களா? அதுவும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று உருளைக்கிழங்கு குருமாவை சற்று வித்தியாசமான ஸ்டைலில் செய்யுங்கள்.
இந்த வெள்ளை உருளைக்கிழங்கு குருமா ஒரு வித்தியாசமான ருசியுடன் இருப்பதோடு, 2 பூரியை எக்ஸ்ட்ரா சாப்பிட வைக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5-6
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கி,
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு குலைய
வதக்காமல், ஓரளவு வதக்க வேண்டும்.
* பின் அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பச்சை
மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவுடன் சேர்த்து
கிளறி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான வெள்ளை உருளைக்கிழங்கு குருமா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
