Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
Potato Cashew Masala Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். உருளைக்கிழங்கை எப்போதும் ஒரே மாதிரி பொரியல் அல்லது குருமா வைத்துதான் சாப்பிடுவோம். ஆனால் உருளைக்கிழங்கை கொஞ்சம் வித்தியாசமாக அனைவரும் விரும்பும் சுவையில் சமைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த தாபா ஸ்டைல் உருளை முந்திரி மசாலாவை முயற்ச்சி செய்து பாருங்கள்.

இந்த உருளை முந்திரி குருமா நீங்கள் வழக்கமாக வைக்கும் உருளைக்கிழங்கு குருமா போல இருக்காது. இது தோசை, சப்பாத்து, புரோட்டா என அனைத்திற்கும் பக்காவான காம்போவாக இருக்கும். உங்களுக்கு இந்த அட்டகாசமான உருளைக்கிழங்கு முந்திரி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் உருளை முந்திரி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 பல் பூண்டு
- 1 அங்குல இஞ்சி, நறுக்கியது
- 1 கப் வெங்காயம், நறுக்கியது
- 15 முந்திரிப் பருப்புகள்
- 6 பழுத்த தக்காளி, விதைகள் நீக்கியது
- தேவையான அளவு உப்பு
பிற பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- அரை கிலோ உருளைக்கிழங்கு
- ஒன்றரை கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் சர்க்கரை
- 2 கொத்து கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் பூண்டு சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், முந்திரி மற்றும் விதைகளை நீக்கி நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
- பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். வாணலியை மூடி வைத்து, தக்காளி நன்கு குழைந்து வேகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- தக்காளி வெந்து மென்மையாகியதும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை மிக்ஸி ஜாரில்ருக்கு மாற்றி, மென்மையான விழுதாக அரைத்து இதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.
- வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- வாணலியை மூடி வைத்து, குறைந்த தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் தாபா ஸ்டைல் உறுதியை முந்திரி குருமா ரெடி. இதை தோசை, சப்பாத்தி அல்லது புரோட்டாவுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
