Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பூசணிக்காய் கடலைப்பருப்பு கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
Poosanikai Kadala Paruppu Kootu Recipe In Tamil: தினமும் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார், குழம்பு என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் வெள்ளை பூசணியும், கடலைப்பருப்பும் இருந்தால், அதைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த பூசணிக்காய் கூட்டை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிடும் போது திவ்யமாக இருக்கும். இப்படி ஒருமுறை கூட்டு செய்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், பின் வாரம் ஒருமுறை இதை உங்கள் மெனுவில் சேர்த்துவிடுவீர்கள்.

உங்களுக்கு பூசணிக்காய் கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூசணிக்காய் கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை பூசணிக்காய் - சிறிது (சற்று பெரிய
துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
வேக வைப்பதற்கு...
* கடலைப்பருப்பு - 100 கிராம் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
* பாசிப்பருப்பு - 50 கிராம் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெள்ளைப்பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சற்று பெரிய
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்து கழுவிய கடலைப்பருப்பு மற்றும்
பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள்
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு
இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெள்ளை பூசணியை
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,
கறிவேப்பிலை சேர்த்து, காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி மூடி வைத்து
10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு
கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை
மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்து
கிளறினால், சுவையான பூசணிக்காய் கடலைப்பருப்பு கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications