Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
வாழைப்பூ வாங்குனா இப்படி கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Vazhaipoo Kootu Recipe In Tamil: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வாழைப்பூ சாப்பிடமாட்டார்களா? அப்படியே சாப்பிட்டாலும் வடை செய்தால் தான் சாப்பிடுவார்களா? வாழைப்பூவைக் கொண்டு வடை செய்து சாப்பிடுவதை விட, அதைக் கொண்டு கூட்டு செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
இதனால் வாழைப்பூவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். மேலும் வாழைப்பூவை இந்த பக்குவத்தில் கூட்டு செய்யும் போது பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வாழைப்பூ கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பூ கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* வாழைப்பூ - 1
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 3
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதை பொடியாக நறுக்கி, தயிர்
கலந்த நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரில் துவரம் பருப்பை போட்டு 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் 2 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம்,
பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி,
4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள வாழைப்பூவை பிழிந்துவிட்டு சேர்த்து, 3
நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 4-5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, வேக வைத்துள்ள பருப்பை
சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து
கலந்து, 4-5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











